ஏ.டி.பி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி இந்தியாவின் சுமித் நாகல்பட்டம் வென்று சாதனை
ஏ.டி.பி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி:இந்தியாவின் சுமித் நகால் பட்டம் வென்று சாதனை
அர்ஜெண்டினா நாட்டில் நடந்த ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சுமித் நகால் பட்டம் வென்றுள்ளார்.
அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் ேக நகரில் ஏடிபி சேலஞ்சர் பட்டத்திற்கான டென்னிஸ் போட்டிகள் நடந்தன.
இதில் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அந்நாட்டின் பகுண்டோ போக்கினிஸ் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சுமித் நகல் (வயது 22) விளையாடினார்.
இந்த போட்டி ஒரு மணி நேரம் மற்றும் 37 நிமிடங்கள் வரை நடந்தது.
உலக தரவரிசையில் 161 வது இடத்தில் உள்ள நகால் 6-4,6-2 என்ற செட் கணக்கில் போகினிசை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதனால் பியூனோஸ் அயர்ஸ் நகரில் நடந்த ஏ.டி.பி சேலஞ்சர் போட்டியில் பட்டம் வென்ற முதல் ஆசியர் என்ற பெருமை நகால் பெற்றுள்ளார்.
Comments
Post a Comment