கிரிக்கெட் வாரிய லெவன் தென் ஆப்பிரிக்கா மோதும் 3 நாள் பயற்சி கிரிக்கெட்- இன்று தொடங்குகிறது

விஜய நகரம்,
தென் ஆப்ரிக்கா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமானில் முடிந்த நிலையில் அடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தெனஆஃபிரிக்கா பங்கேற்கிறது.இந்தியா-தென் ஆப்ரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 2ந் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.
டெஸ்ட் தொடருக்கு முன்பாக தென் ஆப்பிரிக்க அணி, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிராக 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது. இந்த பயிற்சி ஆட்டம் ஆந்திர மாநிலம் விஜயங்கரத்தில் இன்று தொடங்குகிறது.
கிரிக்கெட் வாரிய லெவன் அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக உள்ளார்.குறுகிய வடிவிலான போட்டிகளில் சாதனை படைத்து வரும் ரோகித் சர்மா,டெஸ்ட் சிரிக்கெட்ளில் நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் போராடி வருகிறார்.லோகேஷ் ராகுலின் தடுமாற்றமும், ஊக்கமருந்து பயன்படுத்தாமல் ப்ரித்வி ஷாவுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதும் இப்போது ரோஹித் ஷார்மாவுக்கு டெஸ்ட் கதவு மறுப்பிடியும் திறந்துள்ளது.
தென் ஆஃபிரிக்கா டெஸ்ட் தொடரில் ரோஹித் ஷர்மாவை தொடக்க வீரராக ஆட வைக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அந்த தொடருக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளவதற்கு அவர்க்கு இந்த பயிற்சி களம், கேஷவ் மகராஜ்,செனுரன் முத்துசாமி உள்ளிட்ட சுழற்பந்து வீச்சாளர்களும் தென் ஆப்பிரிக்கா அணியில் உள்ளனர்.அவர்களை சமாளித்து ரன்கள் குவித்து விட்டால்,அது ரோஹித் சர்மாவுக்கு திடமான நம்பிக்கையை கொடுக்கும்.
அதனால் இந்த பயிற்சி ஆட்டத்தில் ரோஹிட்சர்மா மீது தான் அனைவரின் கவனமும் பதிந்து இருக்கும்.இதை போல் பும்ராக்கு பதிலாக அழைக்கப்படுள்ள  வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவும் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்
தென் ஆப்பிரிக்கா அணியும் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும்.
போட்டிக்கான  இரு அணி வீரர்கள் வருமாறு:-
கிரிக்கெட் வாரிய லெவன்:ரோஹித் சர்மா(கேப்டன்).மயங்க் அகர்வால், ப்ரியங் பன்சால், ஈஸ்வரன்,கருண் நாயர்,சித்தேஷ் லாட், கே.எஸ்.பாரத்,ஜலத் சக்சேனா, தர்மேந்திர சிங் ஜடேஜா,அவேஷ் கான், இஷன் போரேல், ஷர்துல் தாகுர், உமேஷ் யாதவ்.
தென் ஆப்ரிக்கா:பாப் டு பிளஸ்சிஸ்(கேப்டன்),டெம்பா பவுமா,டீ புருன், குயின்டான் டீ காக், டீன் எல்கர்,ஜுபைர் ஹம்ஸா, கேஷவ் மகராஜ்,மார்க்ராம்,செனுரன் முத்துசாமி, நிகிடி,அன்ரிச் நார்ஜே, வெரோன்  ப்ளண்டர், டேன் பியிட்,ரபடா,ஹென்ரிச் க்ளாசன்.
காலை 9.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. கடந்த சில நாட்களாக அங்கு மழை பெய்து வருவதால்,இந்த பயிற்சி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.


Comments

Popular posts from this blog

ஏ.டி.பி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி இந்தியாவின் சுமித் நாகல்பட்டம் வென்று சாதனை