Posts

Showing posts from October, 2019

60 ஆவது படத்தில் அழகான அஜித்!!!

Image
60-ஆவது படத்தில்,அழகான அஜித்!! அஜித் நடித்துவரும் இந்த வருடம் வெளியான விசுவாசம்,நேர்கொண்டபார்வை ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியடைந்தன.அதை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். நேர்கொண்ட பார்வை படத்தில் அவர் தாடியும் மீசையுமாக வயதான தோற்றத்தில் நடித்து வந்தார். அதற்கு நேர்மாறாக புதிய படத்தில் அஜித் இளைஞர்கள் மிக அழகான தோற்றத்தில் வர இருக்கிறார். நேர்கொண்டபர்வை படத்தை இயக்கிய வினோத் அஜித் நடிக்கவிருக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தை பற்றி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவ்வப்போது கற்பனை தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த தகவல்கள் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அஜித் அழகான தோற்றத்திற்காக கடுமையான உடற்பயிற்சிகள் செய்து வருகிறார் . இதை வைத்து அவர் அறுபதாவது படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது இதுபற்றி எதுவும் சொல்லாமல் டைரக்டர் வினோத் சிரிக்கிறார்.

ஏ.டி.பி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி இந்தியாவின் சுமித் நாகல்பட்டம் வென்று சாதனை

ஏ.டி.பி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி:இந்தியாவின் சுமித் நகால் பட்டம் வென்று சாதனை அர்ஜெண்டினா நாட்டில் நடந்த ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சுமித் நகால் பட்டம் வென்றுள்ளார். அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் ேக நகரில் ஏடிபி சேலஞ்சர் பட்டத்திற்கான டென்னிஸ் போட்டிகள் நடந்தன. இதில் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அந்நாட்டின் பகுண்டோ போக்கினிஸ் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சுமித் நகல் (வயது 22) விளையாடினார். இந்த போட்டி ஒரு மணி நேரம் மற்றும் 37 நிமிடங்கள் வரை நடந்தது. உலக தரவரிசையில் 161 வது இடத்தில் உள்ள நகால் 6-4,6-2 என்ற செட் கணக்கில் போகினிசை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதனால் பியூனோஸ் அயர்ஸ் நகரில் நடந்த ஏ.டி.பி சேலஞ்சர் போட்டியில் பட்டம் வென்ற முதல் ஆசியர் என்ற பெருமை நகால் பெற்றுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் இந்தியா அபார வெற்றி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் இந்தியா அபார வெற்றி: தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. விசாகப்பட்டினம், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுள்ளது இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 107 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது இந்திய அணியில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 715 ரன்களும் ரோகித் சர்மா 176 ரன்கள் விளாசினார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா அணி 436 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக டீன் எல்கர் 170 ரன்களும் குவின்டன் டி காக் 116 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக அஸ்வின் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின் தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக 50 ரன்களும் சந்திரன் முத்துசாமி 49 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் முகமது ஷமி 5 விக்கெட்டுக...